Saturday, March 22, 2008

ரகுபதி ராஜவ ராஜா ராம்
பதீச பாவன் சீதா ராம்

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாம் ஹே ராம்

நடந்ததை மறந்திடு
நல்லதை தொடர்ந்திடு
அன்பென்னும் ஓர் சொல்லிலே ஆத்திகம் சொல்கின்றவர்
இங்கு யாரும் இல்லையே

மறுமுறை மறுமுறை வருவதை சொல்லி
மாய்ந்தவர் மாய்ந்தவர் வந்ததே இல்லை
தொடர்வது தொடர்வது நாமே நாளை
வருவது வருவது வேறொரு ஆளே
நாமே அன்பென்னும் தீபத்தை ஏற்றியே வைத்தால்
நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ஜோதி ...

வருவது வருவது வேறொரு ஆளே
நாமே அன்பென்னும் தீபத்தை ஏற்றியே வைத்தால்
நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ஜோதி ...

ஒருவனும் ஒஅருவநும் ஒருத்தியும் கூட
வருவதே நானுன் நீயும் தான்
மனிதனை மனிதனாய் பாரும்
மதங்களும் கண் கானோதொடும்
தன்னாலே தாயகம் நாளையை நோக்கே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் சொல்லும் .

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாம் ஹே ராம்

Friday, March 14, 2008

தீச்சொட்டுகள்

தீச்சொட்டுகள்

நெரிசல் பேருந்து
இடுப்பில் குழந்தை
இருக்கைகளில் பிணங்கள்

தீராதத் தேடல்
எந்தப் பூவிலுமில்லை
தோழமை வாசம்

கசாப்புக் கடையில்
எதற்குத் தொங்குகின்றன
கருணைத் தெய்வங்கள்?

தொலைந்து போனது
அசல் வாழ்க்கை
உதாரணம் சொல்லியே.

பள்ளிக்கு விடுமுறை
சத்துணவு இல்லை
பசியில் காகங்கள்

அடுக்கிய குழந்தைகளின்
கண்ணீரில் நனைந்திருக்குமோ
நமத்தத் தீக்குச்சிகள்

வன்முறையாளன் மனைவி
பிரசவ அறை
கத்தியைத் தீட்டும் மருத்துவர்
போதிய மருந்து
காயமேதும் இல்லை
இயல்பாய் பறக்கும் பட்டாம்பூச்சி

ஊன்றிய விதை
அரும்புகளுக்காக காத்திருப்பில்
புரியும் கர்ப்பிணி தாகம்.

கருங்கல் உறுதி
கொத்தனார் வியர்வைக்கு
ஆணி இறங்காத சுவர்

இட ஒதுக்கீடு வேண்டாம் வாருங்கள் எல்லோரும்
சம்பந்திகள் ஆயிடுவோம்.

- மா. மீனாசுந்தர், மன்னார்குடி

யானியின் இசை மந்திரம்

" நான் ஒரு வான் ஆய்வாளரிடம் பேசி கொண்டிருந்த போது , நீங்கள் உயரே பறந்து வான் வெளிக்கு செல்லும் போது உலகம் உங்களுக்கு எப்படி தோன்றியது என்று கேட்க நேர்ந்தது . அவர் சொன்ன பதில் என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது . உலகம் அப்படியே நம் வரை படத்தில் இருப்பது போலவே காட்சி அளிகிறதது அனால் அந்த வரைபடத்தில் உள்ள எல்லை கோடுகள் காணப்பட வில்லை " . இந்த பரந்த சிந்தனையோடு தன் பரந்த விரிந்த இசையை பொழிய தொடங்குகிறார் யானி .

பியானோவில் மெலிதாக ஆரம்பித்து மெதுவாக வொயலின் இசையை கோர்த்து நாம் எத்டிர்பார்கத நேரத்தில் புல்லங்குழளால் புல்லரிக்க வைத்து அதோடு நிற்காமல் இடையில் தாலாட்டி மெல்ல மெல்ல உச்சம் எய்தி புளங்காகிதம் அடைய வைக்கிறார் . என்னே நேர்த்தி அந்த இசைய கோலத்தில் .. உலகின் எல்லா வகை இசையையும் கற்று தேர்ந்த முதிர்ச்சி , அனுபவம் அனைத்தையும் ஒரு சேர பார்க்க முடிந்தது . லண்டன் நகரில் உள்ள , உலகின் தலை சிறந்த இசை கலைஞர்கள் பணியாற்றும் ராயல் பில் ஹார்மொனிக் கலைஞர்களின் இசை அனுபவத்தையும் உணர முடிந்தது . அந்த பியானோ , வொயலின் ,செல்லோ , டிரம்பெட் , புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளின் உண்மையான இசையை நான் கண்டுகொண்டேன் . ஆசியாவில் இருந்து , இந்தியா ... வேண்டாம் , தமிழகத்தில் இருந்து சென்ற ஒரே இசை மேதை மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பணியாற்றிய பெருமை இந்த ராயல் பில் ஹார்மொனிக் , இசை குழுவிற்கு உண்டு .

வார்த்தைகள் இல்லாமல் வளரும் சுகமான கவிதை போன்ற இசை அவருடைய நச்டால்கியா பாடலில் உணரலாம் . இவருடைய பாடல்களை கேட்கும் நம் மனது எந்த நிலையில் இருந்தாலும் முடிவில் மகிழ்ச்சி அடைய போவது உறுதி . தேசிய கீதங்களை போல் உள்ள பாடல்கள் உங்கள் உற்சாகத்தை கரை புரள வைப்பது உறுதி. இவருடைய இசை , அந்த பாடல் தலைபிர்கேற்றர்போல் உங்கள் கற்பனை குதிரைகளை பறக்க வைப்பது திண்ணம் . இந்த இசை சிந்தனையின் வண்ணங்களை காட்டுகிறது . அடர்ந்த இருள் ,சிறு ஒளி கீற்றுகள் மெல்ல மெல்ல ஒளி உயிர்
பெற்று ஒரு சூரியனை பார்த்த உணர்வு , இவை அனைத்தும் கண் மூடி உணர வைக்கிறது .
யானியின் இந்த இசை மந்திரம் , தொண்ணூறு நிமிடங்கள் ஒரே இடத்தில் என் உடலை மட்டும் கட்டி போட்டு சிந்தனையை உலகெங்கும் பரவ செய்த அனுபவம் நீங்கள் அதை கேட்டால் தான் புரியும் .

இசை பற்றி யானி கூறுகையில் ...

படைப்பு வெற்றிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது .
இசை அமைதியில் இருந்தே பிறக்கிறது . எனக்கு முன் இருக்கும் பெரிய சவால் , என் மனதில் நான் மட்டும் கேட்க முடிந்த இசையை இவுலகம் கேட்க வேண்டும் என்பதே .

இந்த இசை மேதை வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தேன் என்று இளைய ராஜாவிற்கு பிறகு பெருமைப்பட வைக்கும் யானியிம் இசை உலகெங்கும் பரவட்டும் .


இன்னும் வளரும் ....